சீன-இலங்கை நட்பு மருத்துவமனை தொடங்கப்பட்ட ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டம்
2022-06-12 16:12:23

சீன அரசின் உதவியுடன் கட்டப்பட்ட சீன-இலங்கை நட்பு மற்றும் சிறுநீரகவியல் மருத்துவமனை தொடங்கப்பட்ட ஓராண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஜுன் 11ஆம் நாள் இலங்கையின் பொலன்னறுவை நகரில் நடைபெற்றது.

இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சிறிசேனா இந்நிகழ்ச்சியில் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கடந்த பல பத்து ஆண்டுகளில் குறிப்பாக அரிசி-ரப்பர் உடன்படிக்கை கையெழுத்தான பிறகு, இலங்கைக்கு சீனா தொடர்ந்து உதவியளித்து வருகிறது. அண்மையில் இன்னல்மிக்க நிலையில் சிக்கியுள்ள இலங்கைக்கு மீண்டும் நன்கொடையாக அரிசி மற்றும் மருந்துகளை வழங்கியுள்ள சீனாவுக்கு மிக்க நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதர் ச்சி ட்சென்ஹொங் கூறுகையில், இந்த நவீன மருத்துவமனை இலங்கைக்கு நன்மை புரிந்து வருவதோடு, தெற்காசியாவிலுள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது. ஒன்றுடன் ஒன்று நேர்மையாக பழகும் சீனா மற்றும் இலங்கை இடையேயான நட்புறவு காலத்தின் சோதனையைத் தாக்குபிடித்து நிற்கிறது என்று குறிப்பிட்டார்.