ஷங்ரி-லா பேச்சுவார்த்தையில் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சரின் உரை
2022-06-12 16:17:47

19ஆவது ஷங்ரி-லா பேச்சுவார்த்தையில் பிரதேச ஒழுங்கு குறித்த சீனாவின் விருப்பம் என்ற தலைப்பில், சீன அரசவை உறுப்பினரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபெங் ஹெ 12ஆம் நாள்  உரை நிகழ்த்தினார்.

மனித சமூகம், வரலாற்றில் கண்டிராத பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து நடைமுறைப்படுத்தி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது என்பது இந்த நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான வழிமுறையாகும் என்று வெய்ஃபெங்ஹெ தெரிவித்தார்.

தைவான் சீனாவின் தைவான் தான். தைவான் பிரச்சினை சீனாவின் உள் விவகாரம். தேசிய ஒருங்கிணைப்பு, நிச்சயமாக நனவாக்கப்படும். தைவான் பிரிவினை சக்திகளுக்கு நல்ல முடிவு கிடைக்காது. வெளிப்புற சக்திகளின் தலையீடு வெற்றி பெறாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.