பாகிஸ்தானின் வரலாற்றில் புதிய உயர் பதிவான பணவீக்கம்
2022-06-12 16:45:36

பாகிஸ்தான் புள்ளியியல் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த வாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 23.98 விழுக்காட்டை எட்டி, வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது.

அந்நாட்டில் எரியாற்றல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதால், சென்ஸிடிவ் விலைக் குறியீட்டுடன் அளவிடப்படும் பணவீக்க விகிதம், முந்தைய வாரத்தில் இருந்ததை விட 2.67 விழுக்காடு அதிகரித்தது. வாரந்தோறும் பணவீக்க விகிதத்தின் அதிகரிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய உச்சநிலையை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நிவாரணத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் விதம், அண்மையில் பெட்ரோ மற்றும் டீசல் விலையைப் பாகிஸ்தான் அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.