சீன-பாகிஸ்தான் ராணுவ நட்புறவு
2022-06-13 17:06:49

சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ட்சாங் யூசியா ஜுன் 12ஆம் நாள் ட்சிங்தாவ் நகரில் பாகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுடன் சந்திப்பு நடத்தினார்.

ட்சாங் யூசியா கூறுகையில், உலக வளர்ச்சி மற்றும் உலகப் பாதுகாப்பு பற்றி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வழங்கிய முன்மொழிவுகள், மேலும் நியாயமான உலக மேலாண்மை அமைப்புமுறையை உருவாக்குவதற்கு சீனாவின் திட்டங்களாகும். பாகிஸ்தானுடன் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுப் படைகளுக்கிடையிலான உறவின் வளர்ச்சியை மேலும் ஆழமாக முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

பஜ்வா கூறுகையில், பாகிஸ்தான்-சீன நட்புறவு உறுதியானது. சீனப் படையுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை நடத்தி, பயங்கரவாதச் சக்தியை ஒடுக்கி, பிரதேச அமைதிக்குப் பங்காற்ற பாகிஸ்தான் விரும்புகின்றது என்று தெரிவித்தார்.