சீனாவில் ஆற்றல் சிக்கனப் பிரச்சார நடவடிக்கை துவக்கம்
2022-06-13 16:20:24

2022ஆம் ஆண்டு சீனத் தேசிய ஆற்றல் சிக்கனப் பிரச்சார வாதம் ஜுன் 13ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பசுமை மற்றும் கரி குறைப்பில் முதலில் ஆற்றல் சிக்கனம் என்பது, சீனாவில் தொடர்ந்து 32ஆவது முறையாக நடத்தப்படும் நடப்பு நடவடிக்கையின் கருப்பொருளாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு ஆற்றல் சிக்கனப் பணியில் சீனா பெற்றுள்ள முக்கிய சாதனைகள், ஆற்றல் சிக்கனம் மற்றும் கரி குறைப்புக்காக முக்கிய தொழில்களைச் சேர்ந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடைமுறை நடவடிக்கைகள், பசுமை வாழ்க்கைக்கான செயல்களின் சாதனைகள், ஆற்றல் சிக்கனத்துக்குத் தலைசிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளிட்டவை 19ஆம் நாள் வரை தொடரும் இந்நடவடிக்கையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.