உள்நோக்கம் மற்றும் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்திய அமெரிக்கா
2022-06-13 17:36:18

ஷாங்ரி-லா பேச்சுவார்த்தையில் சீனா மீது அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பழி தூற்றியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் கூறுகையில், சீனாவைக் களங்கப்படுத்தும் போலி தகவல்களை அமெரிக்கா மீண்டும் பரப்பிய செயல், குழப்பத்தைத் தூண்டிவிடும் அதன் உள்நோக்கத்தையும், மேலாதிக்கத்தை செயல்படுத்தும் அதன் உண்மை தோற்றத்தையும் மேலும் அம்பலப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், தற்போது தைவான் நீரிணையின் அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தாலாக, தைவான் சுதந்திரச் சக்தியின் பிரிவினை நடவடிக்கையும், அதற்கான அமெரிக்காவின் ஆதரவும் இருந்து வருகிறது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் இராணுவ மயமாக்கத்துக்கான மிக முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று வாங் வென்பின் சுட்டிக்காட்டியதோடு, பிரிவினையை ஏற்படுத்தி எதிரெதிர் நிலையைத் தூண்டும் கூற்று மற்றும் செயல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.