பொருளாதார உலகமயமாக்கத்துக்குத் துணை புரியும் சீர்திருத்தம்
2022-06-13 18:21:25

உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது அமைச்சர் நிலைக் கூட்டம் 12ஆம் நாள் ஜெனிவாவில் துவங்கியது. சீன வணிக அமைச்சர் வாங்வென்தாவ், இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நலன் தருவதுடன், வளரும் நாடுகளின் நலனைப் பேணிக்காப்பதாக இருக்க வேண்டும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலக பொருளாதார மீட்சிக்கு உலக வர்த்தக அமைப்பு ஆற்றி வரும் பங்குகளை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.

சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாக சீராக வளரும் அடிப்படை நிலைமை மாறவில்லை. உயர் தர திறப்பை உறுதியுடன் முன்னேற்றி வரும் சீனா உலகிற்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காத்து, திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்கி, மனித குல பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.