இந்திய கிராம மக்களுக்கு நீர் வழங்குதல்:பிரிக்ஸ் நாடுகளின் நிதியுதவி
2022-06-13 14:09:52

வட இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதியில், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் கிராமப்புற நீர் வழங்கல் திட்டம் நடைபெற்று வருகிறது.

2012ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், இமாச்சலப் பிரதேசத்தில் கிராமப்புற நீர் வழங்கல் திட்டத்துக்கு 8 கோடி அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்க புதிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. புள்ளிவிவரங்களின் படி, இமாச்சலப் பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள 1,255 கிராமங்களில் வசிக்கும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இத்திட்டம் பயனடையவுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளால் கூட்டாகச் செயல்படுகிறன. இதன் தலைமையகம் ஷாங்காயில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தொடரவல்ல வளர்ச்சித் திட்டங்களுக்கு மூலவளங்களைத் திரட்டுவது இந்த வங்கியின் நோக்கமாகும்.