ஸ்பெயினில் கடும் வெப்ப அலை
2022-06-13 09:43:20

அண்மையில், ஸ்பெயின் கடந்த 20ஆண்டுகள் காணாத அளவில் கடும் வெப்ப அலையால் தாக்கப்பட்டுள்ளது. 12ஆம் நாள் அந்நாட்டின் பல இடங்களில் வெப்பநிலை 40டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. தென் பகுதியிலுள்ள கோர்டோவா மற்றும் செவில்லி நகரங்களில் 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.

உலகின் காலநிலை மாற்றத்திற்கான நேரடி பின்விளைவு இதுவாகும் என்று ஸ்பெயின் தேசிய வானிலை மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.