ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்குத் துருக்கி எதிர்ப்பு
2022-06-13 14:08:33

பின்லாந்து அரசுத் தலைவர் சவுலி நினிஸ்டோ, நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோர் 12ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், துருக்கியின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஜூன் மாத இறுதியில் மாட்ரிட்டில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாடு ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் சேர்வது பற்றி தீர்மானம் செய்வதற்கான இறுதியான காலக்கெடுவாக இருக்க வேண்டும் என்று நேட்டோ நினைக்கவில்லை என்றார்.

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதை நேட்டோவின் உறுப்பு நாடுகளில் ஒன்றான துருக்கி எதிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.