முத்தரப்பு ஒத்துழைப்புக்கான சர்வதேச மன்றக் கூட்டத்துக்கு வாங்யீ வாழ்த்து
2022-06-14 15:58:47

முத்தரப்பு ஒத்துழைப்புக்கான சர்வதேச மன்றக் கூட்டத்துக்கு சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 14ஆம் நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள், ஒன்றுக்கு ஒன்று முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக திகழ்ந்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இம்மூன்று நாடுகள் நடைமுறை ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்றன. மூன்று நாடுகளிடையே பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்குவதற்கு முத்தரப்பு ஒத்துழைப்புக்கான சர்வதேச மன்றம் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது என்று வாங் யீ இக்கடிதத்தில் தெரிவித்தார்.

மேலும், சீனா, ஜப்பான், தென் கொரிய ஆகிய மூன்று நாடுகள் கிழக்காசியா மற்றும் உலகின் அமைதியான வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய ஆற்றலாக, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்புகளை விரிவாக்கி, பிரதேச அமைதி, பொருளாதார மீட்சி மற்றும் தேசிய நட்புறவுக்கு நேர்மறையான ஆற்றலை ஊட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.