நேட்டோவில் சேர்வதற்கான ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் விண்ணப்பம் சிக்கலானது
2022-06-14 11:30:00

நேட்டோவில் சேர்வதற்கான ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் செயல்முறை எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது. இரு நாடுகளும் நேட்டோவில் அனுமதிக்கப்படும் சரியான நேரத்தை உறுதி செய்ய முடியாது என்று நேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 13ஆம் நாள் ஸ்வீடனில் தெரிவித்தார்.

ஸ்வீடன் தலைமையமைச்சர் மாக்டலேனா ஆண்டர்சன் 13ஆம் நாள் ஸ்டோல்டன்பெர்க்கைச் சந்தித்துப் பேசினார்.

ஸ்வீடன், பின்லாந்து ஆகியவை மே 18ஆம் நாள் நேட்டோவில் சேருவதற்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தன. விதிமுறைகளின் படி, நேட்டோ நிறுவனத்தின் 30 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற முன்நிபந்தனையில்தான் புதிய உறுப்பு நாடுகள் இந்த நிறுவனத்தில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.