உலகின் மிகப்பெரிய இணைய உள்கட்டமைப்பின் கட்டுமானம்
2022-06-14 13:51:24

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய இணைய உள்கட்டமைப்பைக் சீனா உருவாக்கியுள்ளது. சீனாவின் 5G கட்டுமானம் உலகளாவில் முன்னணியில் உள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணைத் தலைவர் சின் கோ பின் 14ஆம் நாள் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், சீனாவின் இணைய உள்கட்டமைப்பின் கட்டுமானம் பாய்ச்சல் வளர்ச்சியை அடைந்து வருகின்றது. உலகின் மிக பெரிய மற்றும் தொழில்நுட்ப முன்னணியில் உள்ள நேரடி ஒளியிழை இணையம் மற்றும் நகரும் செய்தித் தொடர்பு வலைப் பின்னல் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. மின்னணு வணிகம், மின்னணு அரசு நிர்வாகம், தொலை தூரத்திலிருந்து பணி, இணையம் மூலம் தொலைக்கற்றல் என்னும் நெடுந்தூரக் கல்வி முதலிய இணையப் பயன்பாடு பன்முகங்களிலும் பரவல் செய்யப்பட்டுள்ளது. புதிய பொருளாதார நிலைமையில் 2 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சின் கோ பின் தெரிவித்தார்.