“சீனாவில் முதலீடு, எதிர்காலத்திற்கான முதலீடு”
2022-06-14 18:33:40

சீனாவில் முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடு குறித்து அமெரிக்காவின் 2 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்த கருத்தை எட்டியுள்ளனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜுன் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல் சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக விதிமுறையைக் கடுமையாகச் சீர்குலைத்து, உலகளாவிய தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றார்.

மேலும், திறப்பு மற்றும் சகிப்பு, தற்கால ஓட்டத்தின் பொதுப் போக்காகும். மிகப் பெரும் வளர்ச்சி உயிராற்றல் மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட சந்தையாகச் சீனா திகழ்கிறது. உயர் நிலையிலான திறப்புப் பணியை விரிவுபடுத்துவது என்ற சீனாவின் மனவுறுதி மாறாது. சீனாவில் முதலீடு செய்வது என்பது, எதிர்காலத்திற்கான முதலீடு ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.