சீனாவில் உண்மையாகப் பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை அதிகரிப்பு
2022-06-14 14:57:31

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் மே வரை, சீனாவில் உண்மையாகப் பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 56 ஆயிரத்து 420 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகமாகும்.

சேவைத் துறையில் உண்மையாகப் பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 42 ஆயிரத்து 330 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.8 விழுக்காடு அதிகமாகும். உயர் தொழில்நுட்ப தொழிற்துறையில், உண்மையாகப் பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 42.7 விழுக்காடு அதிகமாகும்.

தென்கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவை சீனாவில் செய்துள்ள முதலீடு முறையே 52.8%, 27.1% மற்றும் 21.4% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.