சீனாவுக்கு எதிராக இறுதியில் தோன்றிய ஜப்பானின் உள்நோக்கம்
2022-06-14 14:51:28

19ஆவது ஷாங்க்ரி-லா உரையாடல் 12ஆம் நாள் சிங்கப்பூரில் நிறைவு பெற்றது. ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா அதில் உரை நிகழ்த்தினார். ஷாங்க்ரி-லா உரையாடலில் ஜப்பானின் தலைமை அமைச்சர் ஒருவர் உரைநிகழ்த்தியது இது 2ஆவது முறையாகும். 8ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஜப்பானிய தலைமை அமைச்சர் அபே ஷின்சோ வழங்கிய உரையை விட, இந்த முறை ஃபுமியோ கிஷிடா தனது உரையில் அரசியல், ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சீனாவுக்கு எதிரான அம்சங்களைப் பிரச்சாரம் செய்தார். அது மட்டுமல்லாமல், தனது ராணுவ செலவை அதிகரிக்க வேண்டும் என்று அறிவித்ததோடு, பிற ஆசிய நாடுகள் சீனாவை எதிர்க்குமாறு தூண்டும் விதமாக பரப்புரை செய்தார்.

தற்போது, இந்தோ-பசிபிக் தொலைநோக்குத் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. சீனாவிற்குச் சவால் விடுத்து ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக இப்பொழுது வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ஜப்பானின் அரசியல்வாதிகள் சிலர் கருதியுள்ளனர்.

சீனாவின் வளர்ச்சியே அச்சுறுத்தலுக்குப் பதிலாக வாய்ப்பாக இருக்கும் என்பது பெரும்பாலான ஆசிய நாடுகளின் ஒருமித்த கருத்தாகும். இதனிடிய்ல சிக்கலை ஏற்படுத்த முயன்று வரும் ஜப்பானிய அரசியல்வாதிகள் தோல்வியைச் சந்திப்பர்.