அமெரிக்காவில் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம்
2022-06-14 15:02:29

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 15ஆம் நாள் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தீர்மானிக்கும் என்று ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் பொருளியலாளர் ஒருவர் 13ஆம் நாள் மதிப்பிட்டார்.

100 அடிப்படை புள்ளிகளின் உயர்வு இடர்பாடுடன் கூடிய பயனுள்ள முயற்சியாக இருக்கலாம் என்று அமெரிக்கப் பொருளியலாளர் மைக்கேல் இ. ஃபெரோலி கருத்து தெரிவித்தார். இந்த மாதத்தின் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க தீர்மானிக்குமென அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் இதற்கு முன்பு மறைமுகமாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.