சீன-அமெரிக்க உயர் நிலை ஆலோசகர் சந்திப்பு
2022-06-14 11:14:33

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளிவிவகாரக் கமிட்டியின் அலுவலகத் தலைவருமான யாங்ச்சேச்சு, ஜுன் 13ஆம் நாள் லக்சம்பர்கில் தேசிய பாதுகாப்புக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் ஆலோசகர் சுல்லிவனுடன் சந்திப்பு நடத்தினார். இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தும் அடிப்படையில், தொடர்பையும் பேச்சுவார்த்தையையும் அதிகரிப்பது, தப்பெண்ணம் குறைப்பது, கருத்து வேற்றுமையை உகந்த முறையில் கட்டுப்படுத்துவது ஆகியவற்றை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

யாங்ச்சேச்சு கூறுகையில், அண்மையில் அமெரிக்கா, பன்முகங்களிலும் சீனாவை ஒடுக்கி வரும் செயல், இரு நாட்டுறவை மிகவும் சிக்கலான நிலைமையில் சிக்க வைத்துள்ளது. இது சீன-அமெரிக்க நலன்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளின் நலன்களுக்கும் பொருந்தியதாக இல்லை. ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, அமைதியான சக வாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது ஆகிய மூன்று கோட்பாடுகளை இரு நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதில் சீனாவின் மனவுறுதி மாறாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.