மீட்சியுறும் போக்கில் காணப்படும் சீனப் பொருளாதாரம்
2022-06-15 11:49:40

மே திங்கள் சீனாவில் நிலையான கோவிட்-19 கட்டுப்பாட்டுடன்,  உள்நாட்டின் உற்பத்தித் தேவை படிப்படியாக மீட்சி பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதாரமும் மீட்சியுறும் போக்கு காட்டப்பட்டுள்ளது. மே திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 0.7விழுக்காடு அதிகமாகும். தொழில்துறையின் உற்பத்தி வீழ்ச்சியிலிருந்து மீட்சியுற்றுள்ளது.

மே திங்களில் சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 3லட்சத்து 35ஆயிரத்து 470கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 6.7விழுக்காடு குறைவாகும். இணையம் மூலமான மொத்த சில்லறை விற்பனைத் தொகை 4லட்சத்து 96ஆயிரத்து 40கோடி யுவானைத் தாண்டி 2.9விழுக்காடு அதிகரித்துள்ளது.  

மேலும், இத்திங்களில் சரக்குப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 3லட்சத்து 45ஆயிரம் கோடி யுவானாகி 9.6விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.