ஜோ பைடனின் ஆதரவு விகிதம் வீழ்ச்சி
2022-06-15 10:37:07

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் ஈப்சோஸ் நிறுவனம் 14ஆம் நாள் கூட்டாக வெளியிட்ட மக்கள் கருத்து கணிப்பின்படி, மக்களிடையில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் மீதான ஆதரவு விகிதம் கடந்த 3 வாரங்களில் தொடர்ச்சியாக  வீழ்ச்சியடைந்து 39விழுக்காடாகியுள்ளது. அவரின் பதவிக் காலத்தில் மிகவும் குறைந்த பதிவு,36விழுக்காட்டை எட்டியுள்ளது.

56 விழுக்காடு அமெரிக்க மக்கள் பைடனின் பணித்திறன் மீது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், பைடனின் ஆதரவு விகிதம் 50 விழுக்காட்டுக்கு கீழ் இருந்துள்ளது. அமெரிக்க ஜனநாயக கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி உணர்ச்சி அவரின் ஆதரவு விகிதத்தின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.