பிரிக்ஸ் நாடுகள் பாதுகாப்பு விவகாரக் கூட்டம்
2022-06-15 19:43:04

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகளின் 12ஆவது கூட்டம் 15ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான யாங்ச்சியேச்சீ பெய்ஜிங்கில் இருந்தவாறு இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.