மனித உரிமை பற்றிய பலத்தரப்புவாதம்
2022-06-15 18:26:23

ஜெனிவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கும் ஸ்வீட்சர்லாந்திலுள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்குமான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ, 14ஆம் நாள் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தில் 30க்கும் மேலான நாடுகளின் சார்பாக உரை நிகழ்த்தினார்.

பல்வேறு தரப்புகள், மனித உரிமைத் துறையில் பலதரப்புவாதத்தையும் சர்வதேச மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சியையும் முன்னேற்ற வேண்டும் என்று இவ்வுரையில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பலதரப்பு மனித உரிமை நிறுவனங்கள், ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தையின் மேடையாக மாற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம நிலை மற்றும் நீதியில் ஊன்றி நிற்பது, திறப்பிலும் சகிப்பிலும் ஊன்றி நிற்பது,  நேர்மையில் ஊன்றி நிற்பது, பிரதேச சம நிலையில் ஊன்றி நிற்பது ஆகிய 4 முன்மொழிவுகளை அவர் வழங்கினார்.

இக்கூட்டத்திலும் கியூபாவின் பிரதிநிதி 70க்கும் மேலான நாடுகளின் சார்பாக, உரை நிகழ்த்தினார்.

பல்வேறு நாடுகளின் அரசுரிமை, சுதந்திரம் மற்றும் உரிமைப் பிரதேச முழுமைபாட்டுக்கு மதிப்பு அளிப்பதும், அரசுரிமை கொண்ட நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யாமையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாடாகும். சின்ஜியாங், ஹாங்காங், திபெத் ஆகியவற்றின் விவகாரங்கள், சீனாவின் உள் விவகாரங்களாகும். மனித உரிமை பிரச்சினையை அரசியல்மயமாக்குவதையும் இரட்டை வரையறையையும் எதிர்ப்பதாகவும், மனித உரிமையை காரணமாகக் கொண்டு சீனாவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வதை எதிர்ப்பதாகவும் அவர் இவ்வுரையில் தெரிவித்தார்.