அமெரிக்க உற்பத்தியாளர் விலைக் குறியீடு 10.8 விழுக்காட்டு உயர்வு
2022-06-15 10:55:11

மே திங்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.8 விழுக்காடும், கடந்த மாதம் இருந்ததை விட 0.8 விழுக்காடும் அதிகரித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம், கடுமையான பணவீக்க நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குவதை இது காட்டியுள்ளது என்று அமெரிக்கத் தொழிலாளர் அமைச்சகம் 14ஆம் நாள் தெரிவித்தது.

பொருளாதாரத் துறையில் விநியோக நிலைமை மற்றும் உற்பத்திப் போக்கில் விலை மாற்றத்தை வெளிப்படுத்தும் உற்பத்தியாளர் விலைக் குறியீடு, பண வீக்க நிலைமையை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய எண்ணாகும். உயர்ந்த உற்பத்தியாளர் விலைக் குறியீடு, வரும் சில மாதங்களில் நுகர்வோருக்கு மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.