ஷிச்சின்பிங்-புதின் தொலைபேசி தொடர்பு
2022-06-15 19:10:26

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுன் 15ஆம் நாள் பிற்பகல் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டில் உலகளாவிய பதற்றம் மற்றும் மாற்றங்களை எதிர்கொண்டு, சீன-ரஷிய உறவு சீராக வளர்ந்து வருகிறது. இருநாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பும் நிதானமாக முன்னேறி வருகிறது. இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றவும், அரசுரிமை, பாதுகாப்பு உள்ளிட்ட மைய நலன்கள் மற்றும் முக்கியப் பிரச்சினைகளில் ரஷியாவுடன் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கவும், ஐ.நா., பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் ஒத்துழைப்பையும் சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக மேலாண்மையின் நியாயமான வளர்ச்சியையும் முன்னேற்றவும் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

புதின் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ள சீனாவுக்கு ரஷியா மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. சீனா முன்வைத்த உலகப் பாதுகாப்பு முன்மொழிவுக்கு ஆதரவளிக்கும் ரஷியா, சீனாவின் உள்விவகாரங்களில் எந்த ஒரு சக்தியும் தலையிடுவதை எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

உக்ரைன் பிரச்சினை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பல்வேறு தரப்புகள் பொறுப்புணர்வுடன் உக்ரைன் நெருக்கடி உரிய முறையில் தீர்க்கப்படுவதை முன்னேற்ற வேண்டும். இதற்கு சீனா உகந்த பங்காற்ற விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.