சீனாவுக்கு அமெரிக்கா அளித்த வாக்குறுதி எப்போது செயலாக்கப்படும்?
2022-06-15 10:59:30

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளிவிவகாரக் கமிட்டியின் அலுவலகத் தலைவருமான யாங்ச்சேச்சு, ஜுன் 13ஆம் நாள் லக்சம்பர்கில் தேசிய பாதுகாப்புக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் ஆலோசகர் சுல்லிவனுடன் நடத்திய சந்திப்பு, 4 மணி நேரம் நீடித்தது. அன்கரேச், சூரிட்ச் மற்றும் ரோம் இடங்களில் நடைபெற்ற சந்திப்புகளுக்குப் பின், சீன-அமெரிக்க உயர்நிலை அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட 4ஆவது நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.

ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, அமைதியான சக வாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது ஆகிய மூன்று கோட்பாடுகளை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்துள்ளார். புதிய பனிப்போரைத் தொடுக்கவும், சீனாவின் அரசியல் அமைப்புமுறையை மாற்றவும், கூட்டணி உறவின் மூலம் சீனாவைத் தடுக்கவும், தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை என்றும், சீனாவுடன் மோதுவதிலும் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்றும் ஜோ பைடன் பல முறை வாக்குறுதி அளித்தார். இவை இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள பொது கருத்துகளாகும். ஆனால், அமெரிக்காவின் உண்மை செயல்கள், அந்நாட்டு அரசுத் தலைவரின் வாக்குறுதிக்குப் புறம்பானவை. அதற்கு மாறாக,  இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்துகளின் செயலாக்கத்தில் சீனா மிகுந்த நல்லெண்ணம் காட்டியுள்ளது. அமெரிக்கா வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் தனது வாக்குறுதியை எப்போது செயல்படுத்தும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.