கொடுங்கனவை மோசமாக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளின் போட்டி
2022-06-15 19:44:21

ஜுன் 14ஆம் நாள் வரை, அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான கேட்டறிதல் கூட்டம் இரு முறை நடைபெற்றது. கேட்டறிதல் கூட்டத்தின் நேரலை மூலம், இந்தத் தேசிய கொடுங்கனவின் பாதிப்பை அமெரிக்கா நினைவில் பதிந்து வைக்க முடியும் என்று அந்நாட்டின் சிஎன்என் விமர்சனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. உலகத்தைப் பொறுத்தவரை, அமெரிக்க ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

ஓராண்டுக்கு முந்தைய ஜனவரி 6ஆம் நாள், டிரம்புக்கு ஆதரவான ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றக் கட்டிடத்தத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதுடன் பொதுத் தேர்தலின் முடிவை மாற்ற முயன்றனர். உலகிற்கு பெரும் அதிர்ச்சி தந்த இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமுற்றனர். 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நீண்டகாலமாக அமெரிக்காவின் உட்புறப் பிளவு மற்றும் அரசியல் துருவப்படுத்தல் ஆகியவை தீவிரமாகி வருவதன் விளைவு இதுவாகும்.

இவ்விரு கேட்டறிதல் கூட்டங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளும் சாட்சியங்களும் அமெரிக்க ஜனநாயகத்தின் பிரச்சினையை மீண்டும் வெளிக்காட்டியதுடன், அரசியல்வாதிகள் அதிகாரம் மற்றும் நலன்களைக் பற்றிக் கொள்வதற்கான கருவியாகத் திகழும் அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மை தோற்றத்தையும் அம்பலப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்றக் கட்டிடக் கலவரம் தொடர்பான புலனாய்வு தொடக்கத்திலிருந்து கேட்டறிதல் கூட்டம் நடைபெற்றது வரை, அமெரிக்க கட்சிகளுக்கிடையேயான போராட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அமெரிக்க அரசியல்வாதிகள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டு, உள்நாட்டுப் பிரச்சினையை அலட்சியம் செய்தால், எத்தனை கேட்டறிதல் கூட்டம் நடத்தினாலும் பயன் பெறாமல், அமெரிக்காவின் கொடுங்கனவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.