உக்ரைனுக்கு 100கோடி டாலர் கூடுதல் பாதுகாப்புதவி அளிக்க அமெரிக்கா அறிவிப்பு
2022-06-16 14:57:24

உக்ரைனுக்கு 100கோடி டாலர் மதிப்புள்ள கூடுதல் பாதுபாப்புதவி மற்றும் 22.5கோடி டாலர் மதிப்புள்ள மனித நேய உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 15ஆம் நாள் தெரிவித்தார்.  

பீரங்கி, கடலோரத் தற்காப்பு ஆயுதங்கள், நவீன ராக்கெட் அமைப்புக்குத் தேவையான வெடி மருந்துகள் இந்தப் பாதுகாப்புதவியில் அடங்கும் என்று அன்று உக்ரைன் அரசுத் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பைடன் தொலைபேசியில் பேசிய போது தெரிவித்தார்.