வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுக்கு சீனா வரவேற்பு
2022-06-16 19:24:00

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு யூடிங் ஜுன் 16ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், புத்தாக்கம், சீனாவின் புதிய வளர்ச்சிக் கருத்தின் முக்கிய அம்சமாகவும், உயர் தர பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்காற்றலாகவும் திகழ்கிறது. புத்தாக்கத்துடன் வளர்ச்சித் திட்டத்தைச் சீனா ஆழமாகச் செயல்படுத்தி வருகிறது. சீனாவிலுள்ள ஐரோப்பியத் தொழில் நிறுவனங்கள் இதற்கு ஆக்கமுடன் பங்காற்றி, சீனாவின் திறப்பு மற்றும் புத்தாக்க வளர்ச்சியில் ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றியைப் பெற்றுள்ளன. உயர் நிலை திறப்புப் பணியைச் சீனா தொடர்ந்து விரிவுபடுத்தி, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை வலுப்படுத்தி, வணிகச் சூழ்நிலை மற்றும் புத்தாக்கச் சூழ்நிலையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து, வளர்ச்சியின் பயன்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதைச் சீனா வரவேற்கிறது என்று தெரிவித்தார்.