பிரிட்டன் அரசு சந்திக்கும் பிரச்சினைகள்
2022-06-16 20:38:29

பிரிட்டன் அரசு, வடக்கு அயர்லந்து உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தால், அதன் மீது ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வழக்கு தொடுத்தது. பிரிட்டன் அரசின் இச்செயல், வடக்கு அயர்லந்தின் நிதானமற்ற நிலைமையை தீவிரமாக்கியது என்று வடக்கு அயர்லந்து பிரிட்டனிலிருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் சின் ஃபின் கட்சியின் துணைச் செயலாளர் மிஷேல் ஓனில் சுட்டிக்காட்டினார்.

அயர்லந்து பிரிவதற்கு பிரிட்டன் அரசு ஒப்புக்கொள்ளுமா இல்லையா என்பது பொருட்டல்ல. அடுத்த ஆண்டில் பிரிட்டனிலிருந்து விலகுவது குறித்து பொது மக்கள் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று இரு நாட்களுக்கு முன், ஸ்காட்லந்தின் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் அறிவித்தார்.