தெற்காசியாவுக்குச் செல்லும் புதிய தரை-கடல் பாதை
2022-06-16 20:11:38

புதிய தரை-கடல் பாதையில் சர்வதேச கூட்டு போக்குவரத்துக்கான சோதனை தொடர்வண்டி ஜுன் 16ஆம் நாள் சீனாவின் சோங்சிங் மாநகரிலுள்ள ஒரு நிலையத்திலிருந்து புறப்பட்டது. இப்புதிய பாதை மூலம் தெற்காசிய நாடுக்குச் செல்லும் முதலாவது சர்வதேச சரக்கு தொடர்வண்டி இதுவாகும்.

நடப்பு சோதனை பயணத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட 10 பெரிய கொள்கலன்கள், சோங்சிங் மாநகரின் துவன்ஜியே கிராமத்திலிருந்து திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாட்சே நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு, நெடுஞ்சாலை மூலம் ஜீலோங் நுழைவாயிலைக் கடந்து, இறுதியில் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவை அடையும். 4200 கிலோமீட்டர் நீளமான இப்பயணத்துக்கு 12 முதல் 14 நாட்கள் தேவைப்படும். முந்தைய கடல் போக்குவரத்தை விட 20 நாட்கள் குறைவு.

இப்புதிய பாதை மூலம் சோங்சிங் மற்றும் திபெத் இடையேயான தொடர்பு வலுப்படுவதுடன், சீனாவுக்கும் நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பும் ஆழமாகும்.