வளர்ச்சிக்கான கொள்கை மற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் சீனா
2022-06-16 18:12:33

பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தும் பல்வேறு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தை சீனா விரைவுபடுத்தும் என்று தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் 16ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முதலீட்டை நிதானப்படுத்தி நுகர்வை ஊக்குவிப்பதில், மத்திய அரசின் வரவுச் செலவுத் திட்டத்துக்குள்ளான முதலீடு வெளியீட்டையும் முக்கிய திட்டப்பணிகளின் நடைமுறையாக்கத்தையும் விரைவுபடுத்த வேண்டும். அதனுடன் பெருமளவு நுகர்வையும் ஊக்குவிக்க வேண்டும். உணவு மற்றும் எரியாற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், குறைந்தபட்ச விலையிலான கொள்வனவு செயலாக்கத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். அணு மின் மற்றும் நீர் மின் நிலையங்களின் கட்டுமானத்தைத் தொடங்கி, காற்றாற்றல் ஒளிவோல்ட்டா தளங்களின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, எரியாற்றல் மற்றும் மூலவளங்களின் சேமிப்புத் திறன் உயர்வு தொடர்பான பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வினியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில், முக்கியப் பகுதிகளில் உற்பத்தி மீட்சி, பொருட்களின் ஆதரவு போன்ற பணிகளை ஆக்கமுடன் முன்னேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.