கனடாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு 159ஆக உயர்வு
2022-06-16 15:14:37

இதுவரை, கனடாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு 159 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஜூன் 15ஆம் நாள் அறிவித்தது.

உலகச் சுகாதார அமைப்பு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கனடாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு எண்ணிக்கை, முழு அமெரிக்க கண்ட நாடுகளில் அதிகமாக இருக்கின்றது. இப்பிரதேசத்தில் உள்ள மற்ற நாடுகளில் புதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.