பிரிக்ஸ் நாடுகளின் தேசியப் பாதுகாப்பு விவகார பிரதிநிதிகளின் 12ஆவது கூட்டம்
2022-06-16 16:28:58

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான யாங்சியேச்சு, 15ஆம் நாள் பெய்ஜிங்கில், காணொளி வழியாக, பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகளின் 12ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

பிரிக்ஸ் நாடுகள், திறப்பு சகிப்பு, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி என்ற பிரிக்ஸின் எழுச்சியைப் பின்பற்றி, வளரும் நாடுகளின் கூட்டு நலனை உறுதியாக பேணிக்காத்து, ஐந்து நாட்டு தலைவர்களின் அரசியல் வழிக்காட்டுதலுக்கிணங்க, நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டு தலைவர்களின் 14ஆவது பேச்சுவராத்தைக்கு ஆயத்தம் செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.

தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.