மனித உரிமை விவகாரத்தில் சீனாவுக்கு பல நாடுகள் ஆதரவு
2022-06-17 16:38:15

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50வது கூட்டத்தில், அண்மையில் கியூபா சுமார் 70 நாடுகளின் சார்பில் கூட்டு உரை நிகழ்த்திய போது, மனித உரிமையை ஒரு காரணமாகக் கொண்டு சீன உள் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தவிரவும், 20க்கும் மேலான நாடுகள் தனியாக உரை நிகழ்த்தி சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

சீனாவில் மனித உரிமை நிலைமையைச் சர்வதேசச் சமூகம் குறிப்பாக வளரும் நாடுகள் தெளிந்த சிந்தனையுடன் கண்டு வருவதை இது வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, நெடுநோக்கு போட்டியில் மிகப் பெரிய எதிராளியாக சீனா என அமெரிக்கா கருதி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் அரசியல்வாதிகள் சின்ஜியாங், ஹாங்காங், திபெத், தைவான் உள்ளிட்ட விவகாரங்களைப் பயன்படுத்தி சீனாவை எதிர்த்து வருகின்றனர்.

பொய் திரும்பத்திரும்ப கூறினாலும் உண்மையாகாது. உண்மையிலே, அமெரிக்கா தான், மனித உரிமையை காலில் போட்டு மிதித்து வருகின்ற நாடாகும். அமெரிக்காவில் மனித உரிமை பற்றிய புலனாய்வை ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும்.