ஆப்கானுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிக்க வேண்டும்-சீனா வேண்டுகோள்
2022-06-17 16:24:56

ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தில், ஆப்கான் பிரச்சினை பற்றி 16ஆம் நாள் நடைபெற்ற விவாதத்தில் சீன பிரதிநிதி உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

ஆப்கான் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம். ஆப்கான் மக்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளை அமெரிக்கா உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும் என்றார்.

ஆட்சி புரிதலில் சிறிது முன்னேற்றமடைந்துள்ள ஆப்கான் அரசு, மனித நேயம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளது. ஆப்கான் மக்கள் சந்திக்கின்ற மனித நேய நெருக்கடிக்கு அமெரிக்காவே மூலகாரணம். அமெரிக்கா, ஆப்கான் மீதான ஒரு தரப்பு தடை நடவடிக்கைகளை நீக்கி, நிபந்தனையில்லாத நிலையில், ஆப்கான் மக்களின் சொத்துகளை திரும்பக் கொடுத்து, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் மேற்கொண்டு ஆப்கானுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.