உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகாது:ரஷியா
2022-06-17 11:33:08

உலக வர்த்தக அமைப்பிலிருந்து ரஷிய விலகாது என்று ரஷிய பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் 16ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சர்ச்சைகளைத் தீர்ப்பதில், உலக வர்த்தக அமைப்பின் செயல்திறன் பயனுள்ளதாக இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புதிய நடுவரின் நியமனத்தைத் தடுத்துள்ளதால், பல சர்ச்சைகள் இவ்வமைப்பு முறையில் தீர்க்கப்பட முடியாததைப் பார்த்து வருத்தமாக இருக்கிறோம். ஆனால், பல்வேறு நாடுகளிடையில் நியாயமான போட்டியிடும் விதியைத் தரும் ஒரே ஒரு அமைப்பு முறை உலக வர்த்தக அமைப்பு ஆகும். தற்போது, அதற்கு மாற்றாக வேறு அமைப்பு முறை எதுவும் இல்லை. ஆகையால், உலக வர்த்தக அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் ரஷியா அனைத்து நாடுகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கப் போவதாக ரெஷெட்னிகோவ் கூறினார்.