கடந்த 10 ஆண்டுகளில் சீன அரசு சார் தொழில் நிறுவனங்களின் பங்கு
2022-06-17 17:11:22

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் சாதனை பற்றி 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன அரசவையின் அரசு சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பேங் ஹுவாகாங் அரசு சொத்துக்கள் மற்றும் அரசு சார் தொழில் நிறுவனங்களின் நிலைமை குறித்து அறிமுகம் செய்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, அரசு சொத்துக்கள் மற்றும் அரசு சார் தொழில் நிறுவனங்கள் புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழில் மாற்றப் போக்கினை ஆக்கப்பூர்வமாக பின்பற்றி, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை இயக்காற்றலாகக் கொண்டு, பாரம்பரிய தொழில்களின் உருமாற்றத்தையும் புதிய தொழில்களின் வளர்ச்சியையும் முன்னேற்றுவதில் பயனுள்ள பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பொறுப்புகளை அரசு சொத்துக்கள் மற்றும் அரசு சார் தொழில் நிறுவனங்கள் முழுமையாக நிறைவேற்றி, தேசிய மக்களின் பொது செல்வங்களைப் பேணிக்காத்து வளர்ப்பதில் கூட்டு செழுமையை செவ்வனே முன்னேற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை, நடுவண் அரசு சார் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 15 லட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானை எட்டி, வருடாந்திர சராசரி அதிகரிப்பு விகிதம் 8 விழுக்காடாகி உள்ளது. இந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, தேசியப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.