பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ள பிரிக்ஸ் ஒத்துழைப்பு
2022-06-17 17:14:26

பிரிக்ஸ் அமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் சீனா, பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி, பல துறைகளில் பிரிக்ஸ் ஒத்துழைப்புகளின் முன்னேற்றத்தை ஊக்குவித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிரிக்ஸ் அமைப்பின் நிகழ்ச்சிகள் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்த போது, அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், நிதி மற்றும் நாணயம், மானுட பண்பாட்டுப் பரிமாற்றம், நிலையான வளர்ச்சி, பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் ஒத்துழைப்புகளின் சாதனைகள் காணப்படுகின்றன. பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 14ஆவது சந்திப்புக்கு இது வலுவான அடிப்படையை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுடனும், புதிதாக சந்தை வாய்ப்பைப் பெற்ற நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடனும் இணைந்து, உலக வளர்ச்சிக்கு மேலும் பெரும் பிரிக்ஸ் சக்தியையும் நிறைய சவால்களை எதிர்கொண்டு பதற்றமான உலகிற்கு நேர்மறை ஆற்றலையும் வழங்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.