ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் பயணம்
2022-06-17 11:35:20

உக்ரைனில் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ருமேனிய தலைவர்களை, உக்ரைன் அரசுத் தலைவர் செலன்ஸ்கி 16ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

சந்திப்புக்குப் பின் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரான் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமைக்கான வேட்பாளர் நிலையை உக்ரைனுக்கு வழங்குவதை நான்கு நாடுகள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

4 நாடுகளின் தலைவர்களுடன் உக்ரைன் தேசியப் பாதுகாப்பு ஆற்றலை பலப்படுத்துதல், ஐரோப்பாவில் உக்ரைன் இணைதல், ரஷியா மீதான தடை நடவடிக்கைகளை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்களை விவாதித்தேன் என்று செலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அதே நாள் ரஷிய பாதுகாப்புப் கவுன்சிலின் துணை தலைவர் மெத்வதேவ் சமூக ஊடகத்தில் கூறுகையில், மேலை நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் மேற்கொண்ட பயணத்துக்குப் பயன் ஒன்றும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.