வீடுவாசலின்றி அல்லல்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2022-06-18 17:02:18

யுனிசெப் 17ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டின் இறுதி வரை, மோதல், வன்முறை, பிற நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீடுவாசலின்றி அல்லல்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 3 கோடியே 65 இலட்சமாகும். இது, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, மிக உயர்வான பதிவாகும்.

அதிர்ச்சி அளிக்கும் இப்புள்ளிவிவரங்களைக் கண்டு, குழந்தைகளின் இடப்பெயர்ச்சியைத் தடுக்கும் வகையில், பல்வேறு நாடுகளின் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த குழந்தைகள், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற தேவையான சேவைகளைப் பெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் விருப்பம் தெரிவித்தார்.