உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான சீனாவின் திட்டம்
2022-06-18 20:21:52

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 25வது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 17ஆம் நாள் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

பலதரப்புவாதத்தை ஆதரித்து, முழு மனிதகுலத்தின் கூட்டு மதிப்புகளை நனவாக்குவதை முன்னேற்றும் சீனாவின்  நிலையான நிலைப்பாட்டை ஷிச்சின்பிங்கின் உரை முழுமையாகப் பிரதிபலிக்கின்றது என்று எகிப்தின் அல்-அஹ்ரம் செய்தித்தாளின் துணைத் தலைமையாசிரியர் டலிக் எல்சுனொடி தெரிவித்தார்.

தற்போது, கரோனா வைரஸ் உலகெங்கும் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஷிய-உக்ரைன் மோதல், சர்வதேச நிலைமையின் கொந்தளிப்பைத் தீவிரமாகியுள்ளது. உலகத் தொழில்துறை சங்கிலி, வினியோகச் சங்கிலி, எரியாற்றல், நிதி, தானிய பாதுகாப்பு முதலியவை பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பின்னணியில், உலக வளர்ச்சிக்கான முன்மொழிவுகளின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றுமாறு ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார். மேலும், திட்டவட்டமான யோசனைகளை வழங்கினார்.

வளர்ச்சி சரிசமமின்மையைத் தீர்க்கும் வகையில், மிகவும் சரியான நெறிவரைப்படத் திட்டத்தை அவர் வழங்கினார். உலகத் தொடரவல்ல வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்தும் வகையில், சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கை அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.