விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனரை அமெரிக்காவுக்குத் திரும்பி அனுப்பும் கோரிக்கைக்கு அனுமதி
2022-06-18 16:47:03

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அச்சான்ச்சை அமெரிக்காவுக்குத் திரும்பி அனுப்பும் கோரிக்கைக்கு, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பாடெல் அம்மையார் 17ஆம் நாள் அனுமதி கொடுத்தார்.

பிரிட்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அச்சான்ச்சை அமெரிக்காவுக்கு ஒப்படைப்பது, மனித உரிமையை மீறாது என்று பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து 14 நாட்களில் மேல்முறையீடு செய்யும் உரிமை அச்சான்ச்சுக்கு உண்டு. பிரிட்டன் உயர்நிலை நீதிமன்றத்துக்கு அச்சான்ச் மேல்முறையீடு செய்யவுள்ளார் என்பதை விக்கிலீக்ஸ் இணையத்தளம் உறுதி செய்துள்ளது.

லண்டன் வெஸ்மின்ஸ்டர் மாவட்ட நீதிமன்றம் இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் தொடர்புடைய ஒப்படைப்பு பிடியாணையைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.