இலங்கை தலைமை அமைச்சர் பொருளாதார மீட்சிக்கான வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்!
2022-06-18 17:21:40

இலங்கைப் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே, தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பது தொடர்பான வரைபடத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விவாதிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த வியாழன் அன்று ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு நடத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த வரைப்படம் பூர்த்தி செய்யப்படும் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கை நிதியமைச்சகத்தின் செயலாளர்  மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால உத்திகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும்.