இலங்கை அரசு ஊழியர்கள் இரண்டு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய உள்ளார்கள்
2022-06-18 17:20:57

வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு, பொதுத்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என இலங்கை அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக, அரச மற்றும் தனியார் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு இலங்கை அரசு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

 கடந்த வெள்ளிக்கிழமை, 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்பட முடியும் என்று  இலங்கை அரசு அறிவித்திருந்தது. இது இலங்கையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் சூழலை ஏற்படுத்தியது.

 இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடி மோசமடைந்து வருவதால், இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.