25வது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு
2022-06-18 15:52:34

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 17ஆம் நாளிரவு 25வது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் காணொளி வழியாகப் பங்கெடுத்தார். ரஷியா, எகிப்து, கசகஸ்தான் முதலிய நாடுகளின் அரசுத் தலைவர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.

ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவதாக, வளர்ச்சிக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 2ஆவதாக பல்வகை கூட்டாளியுறவு வளர்ச்சிக்குப் பேரூக்கம் அளிக்க வேண்டும். 3ஆவதாக பொருளாதாரத்தின் உலகமயமாக்கப் போக்கை முன்னெடுக்க வேண்டும். 4ஆவதாக புத்தாக்க உந்து சக்தியை கொண்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.