ஆக்ஸ்ட் இறுதியில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை மீட்சிக்கு வாய்ப்பு:உக்ரைன்
2022-06-19 16:41:57

ஆக்ஸ்ட் திங்கள் இறுதியில், ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த வாய்ப்பு உண்டு என்று உக்ரைன் பேச்சுவார்த்தை பிரதிநிதிக் குழுவின் தலைவர் அலஹமியா கூறியதை உக்ரைன் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

தவிரவும், பெலாரஸ் அரசுத் தலைவர் லுக்கஷன்கோ 17ஆம் நாள் சோதனை பயணம் மேற்கொண்ட போது கூறுகையில், உக்ரைன் மோதலுக்குள் பெலாரஸை சிக்க வைப்பதற்கு, மேலை நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் பெலாரஸ் இம்மோதலில் சிக்கிக் கொள்ளக் கூடாது. பெலாரஸ் தாக்கப்பட்ட பிறகு தான் எதிர் தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்தார்.