வெறுப்பு பேச்சைத் தடுக்க வேண்டும்:குட்ரேஸ்
2022-06-19 16:40:58

ஜுன் 18ஆம் நாள், வெறுப்பு பேச்சுக்கு எதிரான முதல் சர்வதேசத் தினமாகும். இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் கூறுகையில், இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம், களங்கம் மற்றும் பாகுபாட்டைத் தூண்டி விடும் செயல்களுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பன்மை தன்மை மற்றும் சகிப்பு தன்மை வாய்ந்த மதிப்பை முன்னெடுத்து, முயன்றளவில் பகைமை கூற்றைத் தடுப்பதில், சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.