இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
2022-06-19 16:19:02

இந்திய செய்தி ஊடகம் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பல நாட்களாக பெய்து வரும் புயல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்.

தற்போது, அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஏறக்குறைய 3000 கிராமங்களைச் சேர்ந்த 18 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.