சீனாவில் புதிய ரயில்வே கால அட்டவணை
2022-06-20 18:25:40

சீனாவில் புதிய ரயில்வே கால அட்டவணை ஜுன் 20ஆம் நாள் அமலுக்கு வந்தது. பல புதிய நிலையங்கள் மற்றும் புதிய பாதைகளின் திறப்புடன், நாடளவில் ரயில்வே பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து திறன் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜுன் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் ஆசியாவின் மிக பெரிய ரயில் மையமான ஃபாங் டைய் நிலையம் இயங்கத் துவங்கியது. இதே நாள், செங்ச்சோ-சொங்ட்சிங் உயர்வேக இருப்பு பாதை முழுமையாகத் திறந்து வைக்கப்பட்டது. ஹெனன் மாநிலம், ஹுபெய் மாநிலம், சுங்ட்சிங் மாநகர் ஆகியவற்றை இணைக்கும் இந்த இருப்பு பாதையின் மொத்த நீளம், 1068 கிலோமீட்டர் ஆகும். தற்போது சீனாவில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய ரயில் பாதையின் மொத்த நீளம், சுமார் 3200 கிலோமீட்டராகும் என்று தெரிவிக்கப்பட்டது.