பன்னாட்டு நிறுவனத் தலைவர்களின் 3ஆவது ட்சிங்தாவ் உச்சிமாநாடு துவக்கம்
2022-06-20 10:38:59

 

பன்னாட்டு நிறுவனத் தலைவர்களின் 3ஆவது ட்சிங்தாவ் உச்சிமாநாடு 19ஆம் நாள் ஷான்டோங் மாநிலத்தின் ட்சிங்தாவ் நகரில் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் வாங் யோங் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவுகளை ஆழமாக செயல்படுத்தி, வெளிநாட்டுத் திறப்பு என்ற அடிப்படை தேசியக் கொள்கையைக் கடைப்பிடித்து, உயர்தர திறப்பை விரிவாக்குவதில் நிலைத்து நின்று, பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறக்கூடிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த பிறகு, மேலதிக பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து செயல்பட்டு வருவதன் மூலம், தங்களது வளர்ச்சியை நனவாக்குவதோடு, சீனப் பொருளாதார வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தையும் மேம்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்து, உலக தொழில் மற்றும் வினியோக சங்கிலிகளின் நிலைத்தன்மையை உத்தரவாதம் செய்து, உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.